மீண்டும் தமிழில் களமிறங்கும் கும்கி நாயகி லட்சுமிமேனன்!

தமிழ் திரை உலகில் இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் படம் ஆகிய கும்கி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகிய நடிகை தான் லட்சுமி மேனன். அதன் பின்பு இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்கத்தில் குட்டிப்புலி, கொம்பன் மற்றும் மறுத்து ஆகிய தொடர் படங்களில் நடித்திருந்தார்.

அதற்குப் பிறகும் சில படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன், இறுதியாக மிருதன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன் பின்பு எந்த படங்களிலும் நடிக்காமல் லட்சுமிமேனன் மூன்று வருடங்களாக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது குட்டிப்புலி கொம்பன்  ஆகிய படத்தை இயக்கிய முத்தையா அவர்கள் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் அவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளா. இந்த படத்திற்கான பூஜை விரைவில் நடைபெற உள்ளதாம். கொரோனா வைரஸின் அச்சம் நீங்கிய பின்பு புதிய படத்திற்கான படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

author avatar
Rebekal