மூன்று மாதம் கழித்து பாலிவுட் பக்கம் திரும்பிய ராகவா லாரன்ஸ்

காஞ்சனா 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா

By Fahad | Published: Apr 07 2020 12:25 AM

காஞ்சனா 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை நடிகர் அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளார் என தகவல் வெளியானது. இந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என தலைப்பு வைக்கப்பட்டது. இப்படத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் விறுவிறுப்பாக வேலை பார்த்து வந்தார் இயக்குனர் ராகவா லாரன்ஸ். அப்போது, இவர்களின் ராகவாலாரன்ஸிடம் தெரிவிக்காமல் லக்ஷ்மி பாம்  படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இதனால் வருத்தமடைந்த ராகவாலாரன்ஸ் அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின் தயாரிப்பு நிறுவனம் ராகவாலாரன்ஸின் தொடர்புகொண்டு சமாதானம் பேசியது அதற்குள் நடிகர் அக்ஷய் குமார் மற்ற படங்களில் பிஸியாகி விட்டார். தற்போது தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சுமூக முடிவு காரணமாக மீண்டும் லக்ஷ்மி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். மூன்று மாதங்களுக்குப் பிறகு லக்ஷ்மி பாம் படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

Related Posts