பெண்களே! முகத்தில் உள்ள முடிகளுக்கு முடிவுக்கட்டும் சூப்பர் டிப்ஸ்!

நம்மில் சில பெண்களுக்கு முகங்களில், ஆண்களை போல முடி வளருகிறது. சிலருக்கு முகத்தில்

By Fahad | Published: Mar 28 2020 06:47 PM

நம்மில் சில பெண்களுக்கு முகங்களில், ஆண்களை போல முடி வளருகிறது. சிலருக்கு முகத்தில் உள்ள இந்த முடிகளை அவர்களது அழகை கெடுத்து விடுகிறது. இதற்காக பலர் லேசர் முறையில் சிகிச்சை மற்றும் பல கெமிக்கல் கலந்த மருந்துகள் என பல வழிமுறைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இவை பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகின்றனர். தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை எவ்வாறு நீக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.

மஞ்சள் மற்றும் பாலாடை

  கஸ்தூரி மஞ்சளை வாங்கி நன்கு அரைத்துக் கொண்டு, அதனுடன் பாலாடையை கலந்து, முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து முகம் அழகாக மாறிவிடும்.

மஞ்சள்

மஞ்சளை அரைத்து வைத்துக் கொண்டு, இரவில் தூங்கப் போகும் போது, முகத்தில் பூசிக்க கொண்டு தூங்க வேண்டும். பின் காலையில் எழுந்து இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடும்.

பப்பாளி காய்

மஞ்சளுடன் பப்பாளி காயை சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து, முகம் பொலிவாக மாறும்.

பாசி பயறு தோல்

பசும்பாலுடன், பாசி பயறு தோல் கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையில், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும்.