பெண்களே! காலையிலேயே டென்ஷன் ஆகாதீங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

பெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.  பெண்களை பொறுத்தவரையில்,

By leena | Published: Feb 14, 2020 06:30 AM

பெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.  பெண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு இயந்திரமாக தான் மாறி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன், தங்களது கடமைகளை முடித்து, தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான கடமைகளையும் முடித்து, அவர்களை வேலைக்கோ, பள்ளிக்கோ அனுப்பி விட்ட பின்பும், அவர்கள் ஓய்வாக இருப்பதில்லை. இவர்கள் காலையில் எழுந்ததும், பல வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், தங்களை அறியாமலே கோபப்படுகின்றனர். அதிகமான டென்ஷனால், சில வெளிகளில் கணவரையோ அல்லது குழந்தைகளையோ கோபப்பட்டு திட்டி விடுகின்றனர்.

இரவே தயார் செய்தால்

காலையில், நமது சமையலுக்கு தேவையான பொருட்களையோ அல்லது மற்ற வேலைகளுக்கு தேவையான பொருட்களையோ இரவிலேயே வாங்கி வைத்து விட்டால், காலையில் நாம் இதற்காக அங்கும் இங்கும் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இருக்காது.

குழந்தைகளை நேரத்திற்கு உறங்க வைத்தல்

பெற்றோர்கள் குழந்தைகளை நேரத்திற்கு எழுப்புவதில் தான் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இதானால், இவர்களது மற்ற வேலைகளை செய்வதற்கு தேவையான நேரம் கிடைப்பதில்லை. எனவே குழந்தைகளை இரவில் நேரத்திற்கு தூங்க வைத்தால் காலையில் நேரத்திற்கு எழுப்பி விடலாம்.

நேரத்திற்கு எழுந்திருங்கள்

குடும்பத்தில் எல்லாரும் உறங்குகிறார்கள் என்று, நாமும் சேர்ந்து உறங்க கூடாது. அவர்களை விட சற்று நேரம் முந்தியே எழுந்திருக்க வேண்டும். அப்படி எழுந்திருந்தால் தான், நமது வேலைகளை சரியாக செய்ய முடியும்.
Step2: Place in ads Display sections

unicc