தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கடை திறப்பு நேரக்குறைப்பு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 லிருந்து 4281 ஆக

By murugan | Published: Apr 06, 2020 08:26 PM

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 லிருந்து 4281 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை 109 லிருந்து 111 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 319 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் 05 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 01 கொரோனாவால்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க  சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதையெடுத்து புதுச்சேரியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை கடை திறந்திருக்க அனுமதி என்றும் இந்த நேர கட்டுப்பாடு பால் , மருந்துகளைகளுக்கு பொருந்தாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலை 6 மணி முதல் பகல் 2.30 மணி வரை கடை திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்காத நிலையில்  தமிழகத்தில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே  கடை திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Step2: Place in ads Display sections

unicc