கவுண்டி போட்டி: 63 வருடத்திற்கு பிறகு புதிய சாதனை படைத்த கைல் அப்போட்…!

கவுண்டி போட்டி: 63 வருடத்திற்கு பிறகு புதிய சாதனை படைத்த கைல் அப்போட்…!

தென்ஆப்பிரிக்கா  வேகப்பந்து வீச்சாளர் கைல் அப்போட். “கோல்பாக்” ஒப்பந்தத்தின்படி இங்கிலாந்தில் குடியேறி கவுன்ட்டி போட்டியில்  ஹாம்ப்ஷயர் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 16-ம் தேதி தொடங்கிய போட்டியில் ஹாம்ப்ஷயர் Vs சோமர்செட் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹாம்ப்ஷயர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கைல் அப்போட்  முதல் இன்னிங்சில் 40 ரன்கள் கொடுத்து அதிகபட்சமாக  9 விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் 46 ரன்கள் கொடுத்து கைல் அப்போட்  8 விக்கெட் வீழ்த்தினார். இறுதியாக ஹாம்ப்ஷயர் அணி 136 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கைல் அப்போட் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 86 ரன்கள் கொடுத்து 17 விக்கெட்டுகளை பறித்தார்.இதற்கு முன் 1956-ம் ஆண்டு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர் 19 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.அதுவே சாதனையாக இருந்த  நிலையில் அதன் பின்னர் தற்போது  தான் முதல் தர போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் 17 விக்கெட்டை வீழ்த்தி இருப்பது  என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube