கும்பலா சுத்துனாலும் ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான் - ஹர்பஜன் சிங் அசத்தல் ட்விட் !

Kumbala Suttan and Ayo Yammannu screams everything is friendly - Harbhajan Singh

ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமையை இந்தியா மற்றும் பல நாடுகளில் நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள் தினமான இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் நண்பர்கள் தின வாழ்த்துக்களால் நிரம்பி உள்ளது.மேலும் பல அரசியல் தலைவர்கள் ,சினிமா பிரபலங்கள் , விளையாட்டு வீரர்கள் என அனைவரும் ட்விட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கூறி உள்ளார்.அந்த பதிவில் "நம் நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லங்க.ஜல்லிக்கட்டு சம்பவமும் சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் ஆச்சு.கும்பலா சுத்துனாலும் ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான் நட்பும் மச்சானும் துணை" என பதிவிட்டு உள்ளார்.

Related News