கிராமங்களுக்கு சென்று பிரச்சனைகளை கேட்டறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி !

அரசு அதிகாரிகள் முதல் எம்.எல்.ஏ,அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் உட்பட அனைவரும் ஒவ்வொரு கிரமங்களுக்கே சென்று மக்களின் குறைகளை கேட்டறிய “கிராம வஸ்தா” திட்டத்தை கர்நாடக மாநில முதல் குமாரசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் யாத்திர் மாவட்டம் குட் மிட்கல் கிராமத்திற்கு சென்ற முதல்வர் அங்கு மக்களிடையே இருக்கும் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்களை உடனடியாக எடுத்தார்.
பின்னர் பேசிய முதல்வர், எங்களுக்கு களப்பணிகள் தன முக்கியம் என்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலே இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக நாங்கள் சொகுசு பேருந்தில் வரவில்லை என்றும் கிராமங்களுக்கு செல்லும் சாதாரண பேருந்தில் தான் வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.எதிர்க்கட்சிகள் இது குறித்து பொய்யாக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.