இன்று தென்தமிழக திரையரங்குகளுக்கு விசிட் அடிக்கும் கனா படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த முதல் திரைப்படம் கனா. இந்த படத்தை பாடலாரசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ், சதயராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு நல்ல வசூலும், விமர்சகர்களிடையே நல்ல பெயரையும் பெற்று வருகிறது.
இந்நிலையில் தியேட்டர் நிலவரம் பார்க்க தூத்துக்குடி(KSPS தியேட்டர்), திருநெல்வேலி(ரத்னா தியேட்டர்), ஆலங்குளம் (TPV மல்டிப்ளக்ஸ்), மதுரை(குரு, சினி ப்ரியா தியேட்டர்கள்) ஆகிய தியேட்டர்களுக்கு இன்று படத்தின் இயக்குனர், ஹீரோ, ஹீரோயின் ஆகியோர் வரவுள்ளனர்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment