கொவிட்-19 : 11,053 பேருக்கு மோசமான நிலை.! 8,096 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்.!

கொவிட்-19 : 11,053 பேருக்கு மோசமான நிலை.! 8,096 பேர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்.!

  • கொவிட்-19 வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 1,523-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66,492க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நேற்று மட்டும் 143 பேர் பலியாகியுள்ளனர்.
உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. இந்த வைரஸை முதலில் கண்டறிந்த டாக்டர் லி அதே வைரஸ் ஏற்பட்டு பலியானது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. இந்நிலையில், சீனாவில் கொவிட்-19 வைரசால் நேற்று (வெள்ளிக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,523-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 66,492 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் நேற்று மட்டும் 143 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர். அதுமட்டுமல்ல புதிதாக 2,641 பேருக்கு இந்த வைரஸ் தாக்கிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும் 11,053 நோயாளிகள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும், 8,096 பேருக்கு குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என தகவல் வந்துள்ளது. இதனிடையே, கொரோனா (கொவிட்-19) வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையில் பக்க பலமாக இருந்து வந்த மருத்துவ ஊழியர்கள் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள், அது மட்டுமல்ல மேலும் 1,716 சுகாதார ஊழியர்களுக்கு இந்த வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதில், 1,102 பேர் உகான் நகரை சேர்ந்தவர்கள், 400 பேர் ஹூபெய் மாகாணத்தின் பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் என்ற தகவலை தேசிய சுகாதார ஆணையத்தின் துணை மந்திரி ஜெங் யிக்சின் வெளியிட்டுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.

Latest Posts

விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் கொடுத்தவர் இலங்கை நபர்..?
#IPL2020: கொல்கத்தாவை வீழ்த்தி 2-ம் இடத்திற்கு சென்ற பெங்களூர்..!
#IPL2020: மிரட்டலாக பந்து வீசிய பெங்களூர்.. 84 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா.!
சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?
"பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்" - கே.எஸ்.அழகிரி!
இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 1.16  லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு - அமெரிக்க ஆய்வு
கமல்நாத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - மைசூரு சிறப்பு ரயில் இயக்கம்.!
ஆந்திராவில் 27 மாணவர்களுக்கு கொரோனா.. 4 பள்ளிகள் 10 நாட்களுக்கு மூடல்.!
மத்திய வங்கியில் கணக்கு துவங்குவதற்கான விண்ணப்பத்தை வேளாண் கூட்டுறவு வங்கியில் பெறலாம்.!