கொவிட்-19 : ஒரே நாளில் 142 பேர் பலி, புதிதாக 2,009 பேருக்கு இந்த வைரஸ் உறுதி.!

கொவிட்-19 : ஒரே நாளில் 142 பேர் பலி, புதிதாக 2,009 பேருக்கு இந்த வைரஸ் உறுதி.!

  • உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரசால் ஒரே நாளில் 142 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த வைரசால் மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68,500-ஆக அதிகரித்துள்ளது. 

உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா (கொவிட்-19) வைரஸ், சீனாவில் கோர தாண்டவமாடி வருகிறது. முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது. கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. மேலும் முகத்தில் அணியும் மாஸ்க்குகள் பற்றாக்குறையால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சீனாவில் உள்ள நகரங்களில் வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் அடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் கொவிட்-19 வைரசால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,665-ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 142 பேர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 68,500-ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல புதிதாக 2,009 பேருக்கு இந்த வைரஸ் தாக்கிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது முந்தைய விட குறைவு என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube