இத்தனை நாள் தேடிவிட்டோம்! இனியும் தேடுவோம்! இதுவரை யாரும் கண்டறியப்படவில்லை!

தமிழகத்தில் இலங்கை வழியாக  லஷ்கர்-இ-தொய்யா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 6

By Fahad | Published: Mar 28 2020 06:29 PM

தமிழகத்தில் இலங்கை வழியாக  லஷ்கர்-இ-தொய்யா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. மேலும் அந்த பயங்கரவாத அமைப்பு கோவையை குறிவைத்ததாக வெளியான தகவலின் பேரில் கோவையில் சுமார் 2000 போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.   தற்போது வரை இந்த சோதனை ஆங்காங்கே தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்த கோவை போலீஸ் கமிஷ்னர் ஸ்மிதி சரண், ' இதுவரை கோவையில் ஆயிரக்கணக்கில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஆனால் இதுவரை ஒரு பயங்கரவாதி கூட பிடிபடவில்லை என தெரிவித்தார். மேலும் இன்னும் சோதனை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.