கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு! தூக்கு தண்டணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

கோவையில் 2010ஆம் ஆண்டு ஜவுளிக்கடை அதிபர் 11 வயது சிறுமி முஸ்கான் மற்றும் 8 வயது சிறுவன் ரித்திக்ஆகியோரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக மோகன்ராஜ் மற்றும் மனோகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் மோகன்ராஜ், போலீஸ் விசாரணையின் போது தப்பிச்சென்றபோது போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு அளித்திருந்தான்.  இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி இந்த சீராய்வு மனுவை ரத்து செய்து தூக்குத்தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.