பேட்ட - விஸ்வாசம் திரைப்படங்களை அடுத்து கோமாளி படைத்த மாபெரும் சாதனை!

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன்

By manikandan | Published: Sep 08, 2019 11:47 AM

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கோமாளி. பிரதீப் ரங்கநாதன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். ஐசரி கணேஷன் இப்படத்தை தயாரித்து இருந்தார். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகிபாபு என பலர் நடித்து இருந்தனர். இப்படம் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன், நமது சிறு வயது ஞாபகங்களை நினைவு படுத்தும் வகையில் இருந்ததால் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு, தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து ரசித்தனர். இப்படம் இன்று 25வது நாளை கடந்துள்ளது. மேலும் இப்படம் இதனை நாள் கடந்தும், புது படங்களின் வருகைகளை கடந்தும் 100 திரையரங்குகளுக்கும் மேலாக இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்க்கு முன்னர் இந்த வருட தொடக்கத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் மட்டுமே 25 நாட்களை கடந்தும் 100 திரையரங்குகளுக்கு மேலாக ஓடியது தற்போது அந்த சாதனையில் கோமாளியும் இணைந்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc