கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பார்!!மேற்குவங்க முதலமைச்சர்

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பார்!!மேற்குவங்க முதலமைச்சர்

தர்ணா போராட்டத்தை கைவிடுவது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Image result for mamtha banerjee

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க, அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அப்போது, காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.பின் சிறைபிடிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்தார்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அனுமதி மறுப்பு தொடர்பாக  C .B.I தரப்பில் இரண்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது , உச்சநீதிமன்றம் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் , மேற்கு வங்க DGP மற்றும் மேற்கு வங்க தலைமைச்செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் போராட்டம் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பார்.தர்ணா போராட்டத்தை கைவிடுவது குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *