ரோஹித் ,தோனி இருப்பதால் தான் கோலியின் கேப்டன்ஷிப் நல்ல இருக்கு - கம்பீர் அதிரடி..!

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விராட் குறித்து கருத்து தெரிவித்து

By murugan | Published: Sep 21, 2019 08:45 AM

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விராட் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். கம்பீர் கூறுகையில் கோலி  இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். ரோகித் , தோனி அணியில் இருப்பதால்தான் கேப்டன்ஷிப் சிறப்பாக செய்து வருகிறார். ஐபிஎல் தொடரில் தனியாக கேப்டன்ஷிப் செய்யும் போது உங்கள் திறமை தெரிகிறது. ஏனெனில் அப்போது உங்களுக்கு மற்ற வீரர்கள் துணை இல்லை. ரோஹித் சர்மா மும்பை அணிக்காகயும் , தோனி  சென்னை அணிக்காகயும் வாங்கித்தந்த வெற்றிகளை ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும் எனக் கூறினார். மேலும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என கூறினார்.டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க அவருக்கு தகுதி இல்லை என்றால் ஏன் 15 பேர் கொண்ட அணியில் அவரை தேர்வு செய்கிறீர்கள். அதற்கு அணியில் சேர்க்காமல் இருக்கலாம். அப்படி அவர் அணியில் தேர்வு செய்தால் லெவன் அணியில் இடம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc