இன்று முதல் டெஸ்ட் போட்டி…! பாண்டிங் சாதனையை சமன் செய்வாரா கோலி..!

இன்று முதல் டெஸ்ட் போட்டி…! பாண்டிங் சாதனையை சமன் செய்வாரா கோலி..!

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்தப் பயணத்தில் முதலில் நடைபெற்ற டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

இதற்காக கடந்த 17-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை பயிற்சி போட்டி நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்தது.இந்நிலையில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இப்போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் கோலி சதம் அடித்தால்  கேப்டனாக அதிக சதம் அடித்த ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்வார். இந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய முன்னாள் கேப்டன் தோனி சாதனையை சமன் செய்வார்.

author avatar
murugan
Join our channel google news Youtube