புதிய சாதனையை நோக்கி களமிறங்க உள்ள கோலி ,ரோஹித் மற்றும் குல்தீப் யாதவ்!

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டியில்

By murugan | Published: Aug 14, 2019 05:27 PM

இன்று இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.இதற்கு முன் நடந்த இரண்டு ஒருநாள் போட்டியில் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டை பறித்தால் ஒரு புதிய சாதனையை படைக்க உள்ளார்.இந்திய வீரர் ஷமி 56 போட்டிகளில்  அதிவிரைவாக 100 விக்கெட்டை பறித்தார். குலதீப் யாதவ் 53 போட்டிகளில் 96 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.இப்போட்டியில் 4 விக்கெட்டை பறித்தால் ஷமி சாதனையை முறியடிப்பார்.மற்றோரு சாதனையாக கோலி மற்றும் ரோஹித் இருவரும் ஜோடி சேர்ந்து  27 ரன்கள் அடித்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1000 கடப்பார்கள்.
Step2: Place in ads Display sections

unicc