வெளுத்து வாங்கிய கோலி ,ஜடேஜா ..! 601 ரன் குவித்த இந்திய அணி..!

இந்தியா, தென்னாபிரிக்கா இடையே  இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

By murugan | Published: Oct 11, 2019 05:02 PM

இந்தியா, தென்னாபிரிக்கா இடையே  இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 273 ரன்கள் எடுத்தது. இதில்  மயங்க அகர்வால் 108 ரன்கள் எடுத்து வெளியேறினர். களத்தில் கோலி 63 , ரஹானே 18  ரன்கள் உடன் இருந்தனர். இன்று  இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ரஹானே 59 ரன்னில்  ஆட்டமிழந்தார். பின்னர் விராட் கோலி , ரவீந்திர ஜடேஜா இருவரும் கூட்டணி சேர்ந்தனர். Image ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர்.விராட் கோலி 173 பந்தில் சதம் அடித்தார். பின்னர் 295 பந்தில் இரட்டை சதம் விளாசினார்.  இரட்டை சதம் அடித்ததன் மூலம் கோலி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சார்பில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் 7 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். ஜடேஜா 71 பந்தில் அரைசதம் அடித்தார். இவர்கள் இருவரும் 215 பந்தில் 200 ரன்கள் அடித்தனர்.விராட் கோலி 250 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஜடேஜா 104 பந்தில் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார். Image இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc