INDvsNZ: காயம் காரணமாக பாதியில் வெளியேறிய ஹிட்மேன்.!

INDvsNZ: காயம் காரணமாக பாதியில் வெளியேறிய ஹிட்மேன்.!

  • முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.
  • இப்போட்டியில் ரோஹித் ஷர்மாவிற்கு இடது காலில் ஏற்பட்ட தசையில் பிடிப்பு காரணமாக ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இன்று இந்தியா ,நியூஸிலாந்து இடையில் 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக  வழி நடத்தி வருகிறார்.

இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர். நியூஸிலாந்து அணியில் ஸ்காட்  2 விக்கெட்டை பறித்தார்.164 ரன்கள் இலங்குடன் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது.

இப்போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கினர் . சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்த போது இடது காலின் பின் பகுதியில் தசையில் பிடிப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு முதலுதவி சிகிக்சை கொடுக்கப்பட்டது. இதையெடுத்து ரோஹித் ஷர்மா மூன்று பந்துகள் பிடித்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube