அடித்தது ஜாக்பாட்.! முன்னேறியது இந்தியா.!

அடித்தது ஜாக்பாட்.! முன்னேறியது இந்தியா.!

  • இந்திய அணி நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி சாதனை படைத்தது.
  • இத்தொடர் முடிவடைந்த நிலையில் டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் ராகுல், ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 

இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில், 5 போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி சாதனை படைத்தது. இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. பின்னர் குறிப்பாக இந்திய பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர், கோலி ஆகியோரு சிறப்பான ஆட்டத்தை கொடுத்தனர். இதுபோன்று பந்து வீச்சில் பும்ரா, ஷ்ரதுல் தாகூர் எதிரணியை மிரட்டினர். இத்தொடர் முடிவடைந்த நிலையில் டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதில் ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் பட்டியலில் முன்னேற்றம் அடைந்தனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்திலேயே தொடர்கிறார்.

இதையடுத்து, பேட்டிங்கை பொறுத்தவரை, தரவரிசைப்பட்டியலில் 6-வது இடத்திலிருந்து கே.எல்.ராகுல் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 13-வது இடத்திலிருந்து ரோகித் சர்மா 10-வது இடத்திற்குள் நுழைந்துள்ளார். இதைத்தொடர்ந்து 70-வது இடத்திலிருந்து மனிஷ் பாண்டே 58-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 100-வது இடத்திற்கு மேல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 55-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும், பவுலிங்கை பொறுத்தவரை, 37-வது இடத்தில் இருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா 11-வது இடத்தை பிடித்துள்ளார். 40-வது இடத்தில் இருந்த யுவேந்திர சாஹல் 30-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஷ்ரதுல் தாகூர் 91-வது இடத்திலிருந்து 57-வது இடத்திற்கும், சைனி 96-வது இடத்திலிருந்து 71-வது இடத்திற்கும், ஜடேஜா 76-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். ஆனால், 14-வது இடத்தில் இருந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 22-வது இடத்திற்கு பின்னடைவு அடைந்துள்ளார். இந்நிலையில், இந்திய அணிக்கு நியூசிலாந்து டி20 தொடர் ஒரு முன்னேற்றத்தை கொடுத்துள்ளது என தெரியவருகிறது. மேலும், இந்திய மற்றும் நியூசிலாந்து அணிக்கான ஒரு நாள் தொடர் வரும் 5-ம் தேதி தொங்கவுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube