#IndvsWI 1st Day :”கோலி அகர்வால் அரைசதம் ” நிதான ரன் குவிப்பில் இந்தியா !

மேற்கிந்திய தீவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட சென்றது.

இதில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனிடையே டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. ஆண்டி கோவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச தீர்மானித்தது அதன்படி  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கினர்.

லோகேஷ் ராகுல் ஹோல்டர் வீசிய பந்தில் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனையடுத்து  களமிறங்கிய புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 6 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.அதன் பின்பு களமிறங்கிய கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மாயங்க் அகர்வால் மற்றும் கோலி ஜோடி 50 ரன்களை கடந்த நிலையில் ஹோல்டர் வீசிய பந்தில் கார்ன்வாலிடம் கேட்ச் கொடுத்து 55 ரன்களுக்கு மாயங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.

பின்பு களமிறங்கிய அஜன்க் ரஹானே கோலியுடன் ஜோடி சேர்ந்தார் அவரும்  24 ரன்களுக்கு ஆட்டமிழிக்க கோலி தனது வழக்கமான பொறுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் அரைசதம் கடந்தார் மறுபுறம் ஹனுமா விஹாரிநல்ல தடுப்பாட்டம் ஆடியும் 8 பௌண்டரிகள் அடித்து மேற்கிந்திய தீவு பந்துகளை தெறிக்க விட்டார்.பின்பு விராட் கோலி 76 ரன்களுக்கு ஹோல்டரிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் .

முதல் நாள் ஆடமுடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது ரிஷாப் பந்த் (27) மற்றும்  ஹனுமா விஹாரி (42) களத்தில் உள்ளனர்.

IND 264/5 (90.0)

author avatar
Dinasuvadu desk