ஆயிரம் லிட்டர் குடிநீர் கொண்டு அரை டஜன் கார்களை கழுவிய விவகாரம் ..!கோலிக்கு அபராதம்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தலைமையில் இங்கிலாந்து சென்று உலககோப்பை போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில் கோலி தலைநகர் டில்லியில் குருகிராமில் வசித்து வருகிறார்.தற்போது நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.இதற்கு தலைநகரும் விதிவிலக்கல்ல மேலும் குருகிராமில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது.இதனால் அதிகாரிகள் குடி தண்ணீரை வீணாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது.
இதற்கிடையில் தான் கேப்டன் இந்த புகாரில் சிக்கியுள்ளார்.கோலி ஒரு கார் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.தன்னுடைய வீட்டில் அரை டஜன் கார்களை வைத்துள்ளார்.இந்த கார்களை எல்லாம் அவருடைய உதவியாளர் குடிநீர்  கொண்டு கழுவியுள்ளார். அந்த பகுதியில் சோதனையிட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதனை பார்க்கவே உதவியாளருக்கு ரூ.500 அபராதமாக விதித்தனர்.மேலும் அந்த பகுதியில் வசிக்கும் சிலரும் இவ்வாறு பயன்படுத்தியாக தெரிய வந்ததை அடுத்து அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோலியின் அண்டை வீட்டர்களும் இந்த புகாரை சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு அளித்துள்ளனர்.மேலும் கோலி தனது கார்களை கழுவ ஆயிரம் லிட்டரை குடிநீரை  பயன்படுத்துகிறார் என்று  DNA செய்தி நிறுவனம் ஏற்கனவே தெரிவிருந்தது  குறிப்பிடத்தக்கது.
 

author avatar
kavitha