கோட்ஸேவை தேசபக்தர் என கூறிய விவகாரம் : தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ள ஆணையம்!

கோட்ஸேவை தேசபக்தர் என கூறிய விவகாரம் : தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ள ஆணையம்!

மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் பிரக்யாசிங் தாகூர். அவர் பிரச்சாரத்தின்போது கூறுகையில்,’நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் ஆவார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்று அழைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி தரப்படும்’ என்று குறிப்பிட்ட்டார்.

இந்த கருத்துக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக வேட்பாளர் இவ்வாறு கூறியதற்கு மத்திய பிரதேச தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை ஒன்றை கேட்டு உள்ளது, இந்திய தேர்தல் ஆணையம்.

சில நாட்களுக்கு முன்பு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது , ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும் அவர் நாதுராம் கோட்ஸே எனவும் கூறினார். இதற்க்கு அதிமுக பாஜக போன்ற கட்சியினர் தங்களது கண்டனங்களை கூறினார் என்பது குறிப்பிட தக்கது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *