3 அடி உயரம் கொண்ட கிளியா? 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளி!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பலக்லைக்கழக பேராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த ராட்சத கில்லியின் புதைபடிவங்களை கண்டெடுத்துள்ளார்.

அந்த கிளி 7 கிலோ எடையில், 3 1/2 ஆதி உயரத்தில் இருக்கும் என்றும் கூறுகின்றனர். கிளியின் அசாதாரணமான உயரம் மற்றும் வலிமையை வைத்து, அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த கிளியை குறித்து ட்ரேவர் அவர்கள் கூறுகையில், ‘ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடசை விட பிரமாண்டமான கிளிகள் உலகில் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கிளி வழக்கமான கிளிகளை விட அதிக உணவுகளை உண்டு வாழ்ந்திருக்கலாம் அல்லாது சக கிளிகளை கூட உண்டு வாழ்ந்திருக்கலாம்’ எனக் கூறுகின்றார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.