CPL-லில் விளையாடி வரும் st Lucia Zouks அணியை வாங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்.! டேரன் ஷமி தான் கேப்டன்.!

  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் CPL-லில் விளையாடி வரும் st Lucia Zouks அணியை வாங்கியுள்ளது. இந்த அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் டேரன் ஷமி கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை போல மேற்கிந்திய தீவுகளில் சி.பி.எல் எனப்படும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் CPL-லில் விளையாடி வரும் st Lucia Zouks அணியை வாங்கியுள்ளது. இந்த அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் டேரன் ஷமி கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதுகுறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான மோகித் பர்மான் கூறுகையில், உலகின் சிறந்த தொடர்களில் முதலீடு செய்ய ஆவலாக இருப்பதாகவும், சி.பி.எல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதற்குமுன் கடந்த 2015ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் சி.பி.எல்லில் இதுவரை மூன்று முறை கோப்பையை வென்றுள்ள (Trinidad and Tobago Red Steel) என்ற அணியை வாங்கியது. அந்த அணி தற்போது Trinbago Knight Riders எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் வாங்கியுள்ள st Lucia Zouks அணியின் உடை மற்றும் பெயர் குறித்த அறிவிப்பு பிசிசிஐயின் அனுமதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்