இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கிங் கோலி.!

இன்றைய போட்டியில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் கிங் கோலி.!

  • இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
  • கோலி பங்கேற்கவுள்ள இந்த போட்டியோடு தனது 400-வது சர்வதேச போட்டியை நிறைவு செய்கிறார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும், போட்டியை வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணியும் கடும் சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து சாதனை நாயகனான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் மிகப்பெரிய சாதனை மைல்கல்லை ஒன்றை எட்ட உள்ளார். அது என்னவென்றால், இதுவரை 240 ஒருநாள் போட்டிகள், 75 டி20 போட்டிகள் மற்றும் 84 டெஸ்ட் போட்டிகளுடன் 399 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் இன்று கோலி பங்கேற்கவுள்ள இந்த போட்டியோடு தனது 400-வது சர்வதேச போட்டியை நிறைவு செய்கிறார். இதுவரை ரன் குவிப்பு மற்றும் தனது அதிரடியான பேட்டிங் மூலம் சாதனை செய்து வந்த கோலி தற்போது போட்டிகளின் எண்ணிக்கையிலும் சாதனை படைத்திருப்பது ரசிகர்களை கவரும் வண்ணத்தில் உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube