இன்ஸ்டாகிராமில் விராட்கோலியை கலாத்த முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்

  • தற்போது பத்து வருடத்திற்கு முன் எடுத்த தனது பழைய புகைப்படத்துடன் தற்போது

By Fahad | Published: Apr 02 2020 09:32 AM

  • தற்போது பத்து வருடத்திற்கு முன் எடுத்த தனது பழைய புகைப்படத்துடன் தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
  • அதில் பீட்டர் இடது பக்கத்தில் உள்ள  பையனை எனக்கு நினைவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் கோலி மிகச் சிறந்த வீரராக தற்போது வலம் வருகிறார்.அவ்வப்போது எதாவது ஒரு போட்டியில் ஒரு புதிய சாதனையையும் படைத்து வருகிறார். கோலி சிறந்த வீரராக மட்டுமல்லாமல் சிறந்த  ஃபிட்னஸ் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆனால் இவர்  ஆரம்ப கிரிக்கெட் காலத்தில் இப்போது இருப்பதை விட சற்று குண்டாக இருந்தார். அப்போது அவரது உடல் ஃபிட்னஸில் அவர் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை என்றும் டயட்டிலும் அதிக கவனம் செலுத்தவில்லை என பல பேட்டிகளில் அவரே கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பத்து வருடத்திற்கு முன் எடுத்த தனது பழைய புகைப்படத்துடன் தற்போது உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் எனது ரியாக்ஷனை எல்லாத்தையும் தெரிவித்து விடும் என கூறியிருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கோலியை  பங்கமாககலைத்து உள்ளார். அதில் பீட்டர் இடது பக்கத்தில் உள்ள  பையனை எனக்கு நினைவிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.கோலியின் இந்த மாற்றத்தால் தான் 10 ஆண்டுகளில் சிறந்த வீரர்களின் பட்டியலில் ஒரு இடம் பிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News From Kevin Pietersen