40 பேரை காணவில்லை! கேரளாவில் நிலச்சரிவில் சிக்கிய 3 பேர் மட்டும் மீட்பு!

கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.  தேயிலை

By manikandan | Published: Aug 09, 2019 09:02 AM

கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.  தேயிலை தோட்டங்கள் வழியே வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. வயநாட்டில்  மேப்பாடி, புதுமலை ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக, கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பல வீடுகள், மக்கள் வழிபாட்டு தளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் சுமார் 40கும் மேற்பட்டவர்களை காணவில்லை என அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. இவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc