கேரள விமான விபத்து : இறைவனை வேண்டுகிறேன்! இதுவும் கடந்து போகும்! - ஏ.ஆர்.ரகுமான்

கேரள விமான விபத்து : இறைவனை வேண்டுகிறேன்! இதுவும் கடந்து போகும்! - ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்து ட்வீட்.

துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், "விபத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இறந்தவர்களுக்காக நான் இறைவனை வேண்டுகிறேன். இதுவும் கடந்து போகும்." என பதிவிட்டுள்ளார்.

Latest Posts

சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
கொரோனா அதிகரிப்பை அடுத்து ஜெய்ப்பூர் மற்றும் ராய்பூரில் புதிய கட்டுப்பாடுகள்!
டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் 
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!