கேரள விமானவிபத்து : எப்படி நடந்தது? முதல்கட்ட தகவல் இதோ!

கேரள விமானவிபத்து : எப்படி நடந்தது? முதல்கட்ட தகவல் இதோ!

கேரளாவில் விமானம் விபத்திற்குள்ளானது குறித்து முதற்கட்ட தகவல்.

நேற்று கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம்  வந்தனர். இந்த விமானத்தில் மொத்தமாக  2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர் என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில், துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

இந்த விமானம் எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளான நிலையில், இந்த விபத்தில் 18  உயிரிழந்துள்ளனர். 123  காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முதலில் விமானம் ,தரையிறங்கும் நேரத்தில், முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதனை தொடர்ந்து,  மீண்டும் 2-வது முறை தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போது தான் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube