திருமணதிற்கான போட்டோக்களிலும் புதுவிதமாக போராட்டத்தில் ஈடுபட்ட கேரள இளம் ஜோடி!

திருமணதிற்கான போட்டோக்களிலும் புதுவிதமாக போராட்டத்தில் ஈடுபட்ட கேரள இளம் ஜோடி!

  • india |
  • Edited by Mani |
  • 2019-12-23 08:11:56
  • புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் பல்வேறு  விதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • கேரளாவில் ஒரு புதுமண தம்பதி  தங்களது திருமணத்திற்காக எடுத்த  போட்டோஷூட் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. 
மத்திய அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பலர் பலவிதமாக போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை கட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளா, திருவனந்தபுரத்தை சேர்த்த புது இளம் ஜோடியான அருண் கோபி மற்றும் ஆஷா ஆகியோர் தங்கள் எதிர்ப்பை புதுவிதமாக காட்டியுள்ளனர். இவர்கள் தங்கள் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் ஆன திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டில் NO CAA, NO NRC என்கிற பதாகைகளை வைத்து போட்டோ ஷூட் நடத்தி அதனை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த போட்டோக்கள் வைரலாக பரவி வருகிறது.