கேரளாவில் கனமழை எதிரொலி : வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழப்பு

Heavy rains in Kerala: 60 killed in floods so far

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது.இதன்விளைவாக கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில்  கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும்  மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் சேதமடைந்துள்ளது.குறிப்பாக வயநாடு மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளது.மழையால் பல மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.மழை  வெள்ளத்தில்  பலர் காணாமல் போயுள்ளனர். ராணுவம், விமானப்படை, கடற்படை என  அனைத்து படைகளும் தேடும்  பணி மற்றும்  மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.  

Kerala Chief Minister Pinarayi Vijayan says 60 people have died in the floods in the state so far. The South West monsoon is currently intensifying. In Kerala this year, the impact of rainfall has increased as last year. Wayanad district has been badly damaged. Many people have lost their livelihoods due to heavy rains. The Army, Air Force and Navy are all engaged in search and rescue operations. Kerala Chief Minister Pinarayi Vijayan told reporters that 60 people have been killed in the floods in Kerala so far. He said security camps have been set up in several places.