நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி

நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த தாய்லாந்து எம்.பி

தாய்லாந்து நாட்டில்  நாடாளுமன்றம் நடைபெற்று கொண்டிருக்கும்போது எம்.பி.  ரொனாதேப் அனுவத்  தனது தொலைபேசியில் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளார்.

தாய்லாந்து நாட்டில்  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்தது.அப்பொழுது ரொனாதேப் அனுவத் என்ற எம்.பி சுமார் பத்து நிமிடங்கள் ஆபாசப் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.அவர் பார்த்தபடி இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவியது. இதனையடுத்து  இது குறித்து  எம்.பி.  ரொனாதேப் அனுவத்   கூறுகையில்,முதலில் ஒரு பெண்பண உதவி கேட்டதாகவும் ,இதன் பின் அந்த பெண்ணிடம் இருந்து ஆபாச புகைப்படங்கள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube