உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி-கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ..4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தென்மேற்கு மழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு மழை காரணமாக கேரளாவில் உள்ள 9 -க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய 59 பேரை காணவில்லை.மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 95 பேர் உயிரிழந்துள்ளனர்.ராணுவம், விமானப்படை, கடற்படை என  அனைத்து படைகளும் தேடும்  பணி மற்றும்  மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கு இடையில் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பின்னர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ..4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் .வீடு மற்றும் நிலங்களை இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் .நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் குடும்பங்களுக்கு அவசர உதவியாக ரூ.10000  நிதி வழங்கப்படும்.மேலும் 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்  என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.