கோவையில் உயிரிழந்த 17பேருக்கு கேரள முதல்வர் இரங்கல்..!

கோவையில் உயிரிழந்த 17பேருக்கு கேரள முதல்வர் இரங்கல்..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழைபெய்து வருகிறது.இதனால் பல மாவட்ட பள்ளிகளுக்கும் , கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் அதை சுற்றியுள்ள பகுதியில் கடந்த  நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதைஅடுத்து நடூர் என்ற இடத்தில் உள்ள ஏடி காலனியில் நான்கு வீடுகள் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர்  பொது மக்களின் உதவியுடன் 17 பேரின் உடல்கள் மீட்டனர். வீடு இடிந்து விழுந்த 17 உயிரிழந்ததற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளா அரசு உதவ தயாராக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

Latest Posts

ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!
#Breaking: அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
உத்தரபிரதேசத்தில் "கோவாக்சின்" தடுப்பூசியின் 3 கட்ட சோதனை தொடக்கம்.!