இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கென்னடி கிளப்!!!!

  • இயக்குனர் சுசீந்திரன் தற்போது “கென்னடிகிளப்” எனும் படத்தை இயக்கி வருகிறார்.
  • இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள்  தற்போது விழுப்புரத்தில் நடந்து வருவதாகவும், மேலும் இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்குவர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு முன்பு வெளி வந்த படம் “வெண்ணிலா கபடி குழு “.இந்நிலையில் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பாயும்புலி, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர் முதலிய பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் இந்த படங்களை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில்  மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தற்போது “கென்னடிகிளப்” எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சசிகுமார் ,பாரதிராஜா முதலியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்நிலையில் இந்த படம் பெண்கள் கபடி போட்டியில் கலந்து கொண்ட பிறகு நடக்கும்  சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக தற்போது விழுப்புரத்தில் நடந்து வருவதாகவும், மேலும் இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டுக்கு திரைக்குவர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.