பாலிவுட்டில் முன்னனி ஹீரோவிற்கு ஜோடியாக கெத்தாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!!

  • தமிழில் விஜய் , சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
  • தெலுங்கிலும் பவன் கல்யாண், நானி என முன்னனி ஹீரோக்களோடு நடித்துள்ளார்.
  • பாலிவுட்டில் அஜய் தேவ்கானுடன் முதல் படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமாகி அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம் , விஷால் என முன்னனி ஹீரோக்களோடு நடித்து முன்னனி ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தெலுங்கிலும் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடனும் ஜோடி சேர்ந்து அங்கும் முன்னனி ஹீரோயினாக உள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக ஹிந்தி சினிமாவில் கால் பதிக்க உள்ளார். இவரது முதல் படத்தை அமித்சர்மா இயக்க உள்ளார். 1950’களில் இந்திய கால்பந்தாட்ட கோச்சாக இருந்த சையது அப்துல் ரஹீம் வாழ்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ளது. இதில் ஹீரோவாக அஜய் தேவ்கான்  நடிக்க உள்ளார். இவரது மனைவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment