சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்காக ஹிந்தி பட வாய்ப்பை உதறி தள்ளினாரா கீர்த்தி சுரேஷ்!?

  • சூப்பர் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
  • இதே நேரம் போனிகபூர் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படமும் தயாரானது. ஆனால் அந்த படத்தில் கீர்த்தி சுரேஷால் நடிக்க முடிக்காமல் போனதாம். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக அவரது 168வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பூ என இருவர் நடித்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நடிக்கும் இதே வேளையில், அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூர் பாலிவுட்டில் தயாரிக்கும் ஒரு படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க கேட்டார்களாம். ஆனால், தற்போது, தலைவர் 168 படத்தில் நடித்து வருவதால், கீர்த்தி சுரேஷால் ஹிந்தி படத்தில் நடிக்க முடியாமல் போனது என தகவல் வெளியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.