உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதா கழுகு 2?! இயக்குனர் கூறிய தகவல்!

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் முழுக்க மலை காடுகளில் படமாக்கப்பட்டு வரவேற்பை பெற்ற திரைப்படம் கழுகு. இந்த படத்தை சத்யசிவா இயக்கி இருந்தார். யுவன் இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கழுகு 2 படம் தயாராகி உள்ளது. இப்படத்திலும் கிருஷ்ணா – பிந்து மாதவி நடித்து உள்ளனர். யுவன் இசையமைத்துள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில்,

இப்படமும் காடுகளிலேயே எடுக்கப்பட்டதே தவிர இதற்கும் கழுகு முதல் பாகத்திற்க்கும் எந்த சம்பந்தமுமில்லை என கூறினார். மேலும், இயக்குனரின் சொந்த ஊரான மூணாறில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.