காஷ்மீர் தொடர்பான வழக்குகள்: இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

காஷ்மீர் தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.அதில்,காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.ஆனால் அவர் அறிவித்தபோதே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர்,லடாக் !அக்டோபர் 31 -ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது சட்டம்

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களையில் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனையடுத்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டது.மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்ட மசோதாவிற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் தெரிவித்து விட்டார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி வழக்கறிஞர் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் டைம்ஸ்  நாளிதழின் எடிட்டர் அனுராதா பாசின் கருத்துரிமையை மறுக்கும் வகையில் காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து மனு தாக்கல் செய்தார்.

இந்த இரண்டு வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.