காஷ்மீர் விவகாரம் : திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து  370-வதை  ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  காஷ்மீர் விவகாரத்தில்  முதலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எனவே காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி-களும் டெல்லி, ஜந்தர் மந்தரில் ஆகஸ்ட் 22 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதனை தொடர்ந்து , காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக எம்.பி-க்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.