காஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நாடுகள்!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தலையிடும் படி பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால், எந்த நாடும் இதுவரை பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கவில்லை.

கடந்த 5 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேறிய காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

 

இந்த விவகாரத்தில், அமெரிக்கா,சீனா நாடுகளிடம் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது.இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளுமாறு கூறிவிட்டனர். ரஷ்யா தரப்பில் இந்தியாவின் இந்த முடிவிற்கு ஆதரவு அளித்துள்ளது. மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஐ.நா சபையிடம் முறையிட்ட பாகிஸ்தானிடம் , காஷ்மீர் கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்துள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.