காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்!

வழக்கறிஞர் சரவணன் ஒரு ஆங்கில தொலைக்காட்சி ஊடகம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பாக கலந்து கொண்டார். இந்த விவாத நிகச்சின் பொது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என கூறியதாக பாஜக அவரை கடுமையாக சாடியதாகவும், டிவி வெறியாளரும் கடுமையாக சாடியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் சரவணன் கொடுத்த விளக்கத்தில்,  நான் அந்த ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது, kashmirwas never an integeral part of india ( காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை ) என்றுதான் குறிப்பிட்டேன்.

ஆனால் அந்த நெறியாளர், நான் KASHMIR IS NOT A PART OF INDIA ( காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை ) என நான் கூறியதாக சொல்லி என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். பிறகு, பாஜக தொண்டர்களும் இதே போல எனது புகைப்படங்களை போட்டோஷாப் செய்தும் திட்டி வருகின்றனர். ஆனால் நான் அப்படி கூறவில்லை. என கூறி விளக்கம் அளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.