காஷ்மீர் விவகாரம் :  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக 30 மாணவ-மாணவியருக்கு நோட்டீஸ்

காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியதாக  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக

By venu | Published: Aug 11, 2019 07:14 PM

காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியதாக  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக 30 மாணவ-மாணவியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சூட்டை கிளப்பி வந்த காஷ்மீர் விவகாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் முற்றுப்புள்ளி வைத்தார்.அதாவது காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது என்றும் காஷ்மீர் மாநிலம் இரண்டு  யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார். அமித் ஷா இந்த அறிவிப்பை அறிவித்த உடனே மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.கடும் எதிர்ப்புக்கு மத்தியில் காஷ்மீர் தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனையடுத்து மக்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒருசேர கிளம்பி வருகிறது.இந்த நிலையில்  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து நோட்டீஸ் ஒட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடி என்ற பகுதியில் உள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர்.குறிப்பாக ஆந்திரா,கர்நாடகா,ஜம்மு -காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் விவகாரம்  குறித்து 30 மாணவ -மாணவியர்கள் நோட்டீஸ் ஒட்டியதாக புகார் எழுந்தது.இதனையடுத்து இந்த மாணவர்களிடம் விளக்கம் கேட்டு  மத்திய பல்கலைக்கழக ஒழுக்க நெறி கண்காணிப்பாளர் ராஜகோபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc