சில்லாய் கலான்! சில்லாய் குர்த்! சில்லாய் பச்சா! காஷ்மீரின் மூன்று நிலை குளிர்காலம் பற்றி தெரியுமா?!

  • காஷ்மீரில் தற்போது குளிர்காலம் நிலவி வரும் வெளியில் தற்போது கடும் குளிர் காலம் தொடங்கிவிட்டது. 
  • இந்த கடும் குளிர் காலம் நிலவும் காலம் சில்லாய் கலான் என அழைக்கப்படுகிறது. 

தற்போது நம்ம ஊரில் நிலவும் மார்கழி மாத குளிரையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காலையில் எழுந்துகொள்ள அலுத்துக்கொள்கிறோம். ஆனால் எப்போதும் குளிராகவே இருக்கும் வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.

அதிலும், காஷ்மீர் பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. அதாவது, அதிக குளிர் தரும் சில்லாய் கலான் எனும் கடும் குளிர் காலம் தொடங்கியது. இந்த குளிர் காலம் டிசம்பர் 21 முதல் தொடங்கி 40 நாட்கள் நிலவும். இந்த காலத்தில் ஏரி, குளம், ஆறு ஆகியவை உறைந்து போகும் அளவிற்கு குளிர் நிலவும். இந்த நாட்களில் பெரும்பாலான நேரங்களில் காஷ்மீர் பகுதிகளில் இருள் நிலவும். ஆதாலால் யாரும் வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்திருப்பர்.

இந்த காலகட்டத்தில் கைவினை பொருட்கள், அதிகம் தயாரிக்கப்படும். பெறான், கேங்கர், போன்ற விரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

சில்லாய் கலான் காலம் 40 நாளை அடுத்து, பிப்ரவரி 1 முதல் 19 வரை சில்லாய் குர்த் எனும் காலம் தொடங்கும். அதாவது குளிர்காலம் சற்று குறையும் காலம். அடுத்ததாக சில்லாய் பச்சா எனப்படும் குளிர் காலம் முடியும் காலம். அது மார்ச் 2 ஆம் தேதி வரை நிலவும். அத்தோடு காஷ்மீர் குளிர்காலம் நிறைவு பெற்றுவிடும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.