சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது! ஆளுநரின் ஆலோசகர் விளக்கம்!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு லடாக் தலைநகராக கொண்டு ஒரு யூனியன் பிரதேசமும், ஜம்முவை தலைநகராக கொண்ட இன்னொரு யூனியன் பிரதேசங்களும் அறிவிக்கப்பட்டன.

இதற்க்கு பலத்த விமர்சனங்களும், ஆதரவுகளும் பெருகி வருகிறன. அந்த மசோதா நிறைவேற்ற படத்தை தெடர்ந்து அங்கு சட்டம் இணையதள சேவை, தொலைபேசி சேவை முடக்கப்பட்டன. இந்த செயல் நாடு முழுவதும் விமர்சனத்துக்குள்ள்னது.

இது குறித்து காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர்விஜயகுமார் கூறுகையில்,  ‘விரைவில் ஜம்மு காஷ்மீரில் தொலைத்தொடர்பு தேவை விரைவில் முழுதாக செயல்படுத்தப்படும். சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது.’ என விளக்கம் அளித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.