பாகிஸ்தான் காஷ்மீரில் நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

பாகிஸ்தான்,  காஷ்மீரில் உள்ள மீர்பூர் எனும் நகரத்தில் நேற்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவு என பதியப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக பாகிஸ்தான் அரசு வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை குழந்தைகள் உட்பட 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 300 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மீர்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் சாலை பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஊருக்கு செல்வதில் மிகவும் கஷ்டமாக இருக்கிறதாம்.  ஆற்று பாலங்களும் சேதமடைந்துள்ளதாம். அங்கும் சிலர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளனர்.

சிந்து நதியின் துணை நதியான ஜீலம் நதியின் கால்வாய் பகுதியில் பிளவு ஏற்பட்டு உள்ளதால், அப்பகுதி சுற்றியும் வெள்ளநீர்  சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களைமீட்க பலர் போராடி வருகின்றனர்.

இந்த பயங்கர நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளதாம். பஞ்சாப், சட்டீஸ்கர், டெல்லி ஆகிய பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.