கருவளையமா? கவலை வேண்டாம்! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

இன்று அதிமான இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த கருவளையம் தான்.

By Fahad | Published: Apr 01 2020 12:41 AM

இன்று அதிமான இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே இந்த கருவளையம் தான். இந்த கருவளையத்தை பி[போக்குவதற்காக நாம் செயற்கையான பல மருத்துவ முறைகளை தேடி சென்றிருப்போம். ஆனால், அவற்றால் நமக்கு பிரச்னை தான். தற்போது நாம் இந்த பதிவில் கருவளையம் நீக்குவதற்கான வழிகள் பற்றி பார்ப்போம்.

 தேவையானவை

  • வெள்ளரிக்காய்
  • உருளைக்கிழங்கு
  • பன்னீர்
  • வெள்ளை துணி

செய்முறை

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சம அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும். பின் இரண்டையும் நன்றாக மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து, கண்களின் மேல் துணியை கண்களின் மேல் போடா வேண்டும். அந்த துணியின் மேல் அரைத்த கலவையை வைத்து 30 நிடங்கள் ஊற விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 5 நாட்களுக்கு செய்து வந்தால் கண் வளையம் மறைந்து, அழகான கண்களை பெறலாம்.