சிவகார்த்திகேயனை தொடர்ந்து கார்த்தியின் அப்பாவாக களமிறங்கும் நெப்போலியன்!

நடிகர் கார்த்தி கைதி படத்தை அடுத்தது ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு சுல்தான் என படக்குழு தலைப்பு வைத்துள்ளதா தெரிகிறது. இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடிகர் நெப்போலியன் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னர் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லில் வேகமாக நடைபெற்று வருகிறது.